சைக்கிள் பந்தய விளையாட்டுத் தொடரில் தனிச் சிறப்பு கொண்ட, ஸ்பெயினில் நடைபெறும் லா வால்டா 2019ஆம் ஆண்டுக்கான சைக்கிளோட்ட பந்தயத்திற்கான உத்தியோக பூர்வ பந்தய வழி அறிவிக்கப்பட்டுள்ளது.
74ஆவது அத்தியாயமாக நடைபெறும் இந்த பந்தயம், சாலினாஸ் டி டொர்ரிவியஜாவில்இருந்து மெட்ரிட் வரை நடைபெறவுள்ளது.
இப் பந்தயம் எதிர்வரும் ஆண்டு, ஒகஸ்ட் 24ஆம் திகதி முதல் செப்டம்பர் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மொத்தம் 3,272.2 கிலோ மீற்றர் தூரத்தை சைக்கிளோட்ட வீரர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இதில் ஏற்றமான எட்டு மலைப்பகுதிகள் அடங்கும். அதில் ஐந்து புதியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலமானதும் பழமையானதுமான லா வால்டா சைக்கிளோட்ட பந்தயம், மொத்தம் 21 சுற்றுகளாக நடைபெறும்.
இதில் மொத்த பந்தய தூரம் 21 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொறு கட்டமாக போட்டிகள் நடைபெறும். இதில் அதிக சுற்றுகளில் வெற்றிபெற்று அதிக புள்ளிகள் பெற்ற வீரர் சம்பியனாக தெரிவுசெய்யப்படுவார்.
ஏற்றம், இறக்கம் நிறைந்த பதைகளில் நடைபெறும் இந்த பந்தயத்தில் பிரபல அணிகளை சேர்ந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பர்.