முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபகாரிய செய்தியொன்று வந்து சேரலாம்.
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம், வீடு மாற்றம் செய்யலாமா, என்ற சிந்தனை மேலோங்கும். மாலை நேரம் விரயம் உண்டு.
வெளியூர்ப் பயணங்களால் வெற்றி கிடைக்கும் நாள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். நூதனப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.
மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். இனிய சம்பவங்கள் நடைபெறும்.
கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள். வருமானம் இருமடங்காகும். பெற்றோர்களின் ஆதரவு உண்டு.
இடம், பூமி வாங்கும் எண்ணம் மேலோங்கும். காரிய வெற்றி ஏற்படும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
வாசலைத் திறந்துவைத்து வரும் விருந்தினரை உபசரிக்கும் நாள். நேசக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும். பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும்.
வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். குடும்பத்தில் பெரியவர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறை கண்டு பிடிக்கலாம்.
ஆதாயம் அதிகரிக்கும் நாள். உறவினர்களின் வருகை உண்டு. உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும்.
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் பலன் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு உண்டு. வருமானம் திருப்தி தரும்.