திருச்சி விஷ்வா நகர் பகுதியை சேர்ந்தவர் நவீனா. இவர் தனது மகன் மற்றும் மருமகள் உடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 30ம் தேதி உடல் கருகிய நிலையில் வீட்டில் உயிரிழந்து கிடந்தார் அருகில் அவரது மருமகள் ரேஷ்மா மயக்கமடைந்த நிலையில் கிடந்தார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு உடனே தகவல் கொடுத்தனர். அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது மருமகள் மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.
ஆனால், அவரின் பரிசோதனை அறிக்கையில் அவர் தலையில் குத்தி கொலை செய்யப்பட்டது உதவியாகவே காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மருமகன் ஹேமாவிடம் அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் மாமியாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
காதல் திருமணம் செய்து கொண்டதால் தன்னை மாமியார் அடிக்கடி கொடுமைப்படுத்தியதாகவும் தற்போது இரண்டாவதாக கருவுற்ற போது அதை கலைக்குமாறு வற்புறுத்தி வந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








































