நாமக்கல் மாவட்டம் பட்டியை சேர்ந்தவர் நடேசன் இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கணேசன் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரின் கணக்கு வழக்குகளை பார்க்க அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை பணிக்கு அமர்த்தி உள்ளார்.
இந்நிலையில் செந்தில்குமாரின் சடலம் எரிந்த நிலையில் சாலையில் கிடந்ததாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவல் எடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, நடேசன் செந்தில்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில் செந்தில்குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், தனது மனைவியுடன் செந்தில் குமாருக்கு கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் அதனை விட்டுவிடுமாறு கூறியும் தொடர்ந்து வந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.
இந்த வாக்குமூலத்தை அடுத்து நடேசன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த உறவினர்கள் அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








































