முழு நாட்டுக்கும் செய்த அழிவுக்காக கூட்டாக பொறுப்பேற்று பதவி விலகுமாறு அரசாங்கத்திடம் கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தலைவர்கள் வேறு நபர்கள் மீது குற்றங்களை சுமத்தி விட்டு, தாம் தவறு செய்யாதவர்கள் என காண்பிக்க முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டை பாதாளத்திற்குள் தள்ளியமைக்கான பொறுப்பை ஒருவர் மாத்திரமல்ல, முழு அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கெத்தாராம ஸ்ரீ சித்தார்த்த அறநெறி பாடசாலை கட்டிடதத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.
பொய்யான ஆடம்பர வாய்ப் பேச்சு விற்பன்னர்களை வெற்றி பெற செய்ததன் விளைவுகளை நாடு அனுபவித்து வருகிறது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.








































