Loading...
சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ படத்தில் இடம் பெறும் ஒரு குத்துப் பாடலுக்கு நடிகை ரெஜினா நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் ஆச்சார்யா. இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்த நிலையில் புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு குத்துப் பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். தற்போது அதே பார்முலாவை நடிகை ரெஜினாவும் பின்பற்றியுள்ளார். அந்த வகையில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘ஆச்சார்யா’ படத்தில் நடிகர் சிரஞ்சீவியுடன், ரெஜினா குத்தாட்டம் போட்டுள்ளார்
Loading...








































