கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் எண்ணமில்லை என இலங்கை இளம் கிரிக்கெட் வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ கூறியுள்ளார்.
நேற்று , சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வீரர் ஏஞ்சலே பெரேரா அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பானுகா ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
இதனிடையே, இலங்கை கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் 23 வயதான அவிஷ்கா பெர்னாண்டோவும் ஓய்வு பெறவுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின.
இந்நிலையில், தான் ஓய்வு பெறவுள்ளதாக பரவிய தகவல்கள் குறித்து அவிஷ்கா பெர்னாண்டோ விளக்கமளித்துள்ளார்.
வணக்கம் நண்பர்களே, எந்த வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறும் எண்ணம் எனக்கு இல்லை.
தயவு செய்து இந்த கிசுகிசு சமூக ஊடக பக்கங்களைப் பின்தொடரவோ நம்பவோ வேண்டாம் என அவிஷ்கா பெர்னாண்டோ தனது ட்விட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.








































