பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், பணபெட்டி எடுத்து செல்ல போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் செம்ம ஆஃபரை வழங்கியுள்ளனர். முதல் நாளில் 3 லட்சம் பணத்தை சரத்குமார் கொண்டு வந்த நிலையில், அதன் பின்னர் 5 லட்சம் உயர்த்தினர்.
தற்போது 12 லட்சம் வரை பணப்பெட்டியை பிக்பாஸ் உயர்த்தி இருக்கின்றனர். இதனிடையே 12 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு சிபி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் அவரது ரசிகர்களை மிகவும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. மேலும், கோல்டன் டிக்கெட்டை பெறுவதற்கான இறுதிப்போட்டி வரை வந்த சிபி, நிச்சயம் அந்த டிக்கெட்டை பெறுவார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், அமீர், டிக்கெட் டு ஃபினாலேவை வென்றார். அதற்கு பிறகும் இறுதிப் போட்டிக்கு செல்வார், டைட்டில் வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். வெளிப்படையாக பேசக் கூடியவர் என சரத்குமாரை நேரடியாக பாராட்டினார் சிபியை.
மேலும், னைத்து போட்டிகளிலும் தன்னுடைய முழு பலத்தை கொடுத்த சிபி, கடந்த வாரம் எவிக்சன் பட்டியலில் இருந்து கடைசி ஆளாக காப்பாற்றப்பட்டார். இதுவும் கூட அவர் பணப்பெட்டியை எடுத்துச் சென்றதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
எனவே சிபியின் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், அவரது இந்த முடிவு சரியானது தான் என பலரும் பாராட்டி வருகின்றனர். கடந்த சீசனை பொறுத்த வரையில் ரூ.5 லட்சம் மட்டும் தான் வைக்கப்பட்டது.
ஆனால் இந்த சீசனில் 3 லட்சத்தில் இருந்து 12 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 12 லட்சம் என்பது நல்ல ஆஃபர் தான். அதனால் அந்த பணத்தை எடுத்துச் சென்றது மிகவும் புத்திசாலித்தனமான முடிவு என்று பலரும் அவருக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிபியின் இந்த முடிவு தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் டிரெண்டிங் ஆகி வருகிறது. இதனால் ட்விட்டரில் #Ciby என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.








































