Loading...
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைப் பற்றி முதன்முறையாகப் பேசியுள்ளார்.
அரச வானொலியான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு (SLBC) வழங்கிய நேர்காணலின் போதே அவர் மைத்திரியை பற்றி தெரிவித்துள்ளார்.
Loading...
சிறிசேன அரச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஐக்கிய தேசிய முன்னணிக்கு நன்றி தெரிவித்ததாகவும் ஆனால் 2020ல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு (SLPP) ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணியை தாக்கத் தொடங்கியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் கூறினார்.
முன்னாள் அரசதலைவர் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை தாக்க ஆரம்பித்துள்ளார் என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, எதிர்காலத்தில் சிறிசேன தன்னைத் தானே தாக்கிக் கொள்ளக் கூடும் எனவும் தெரிவித்தார்.
Loading...








































