தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலே – தமிழ் மக்கள் நம்பக் கூடிய வகையிலே – தமிழ் மக்களின் இருப்பை அங்கிகரிக்காத வகையிலே நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையாது என தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ( Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் மட்டும் தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பதை உலகமே ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.








































