சென்னை கொரட்டூர் பகுதியில் 12ம் வகுப்பு சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி வயிற்கு வலி ஏற்பட்டதால் அவரது பெற்றொர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்ததில் அவர் இரண்டு மாத கர்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அந்த சிறுமிக்கு பார்த்தசாரதி என்பவருடன் இன்ஸ்டாகிராம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அவரின் வீட்டிற்கு அழைத்து சென்ற பார்த்தசாரதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தை அடுத்து, பார்த்தசாரதியை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சமூகவலைதளங்களில் குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.








































