Loading...
சென்னை ஆதம்பாக்கம், பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அந்த பகுதியை சேர்ந்த திருநம்பி ஒருவருடன் நட்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவருடனான நட்பை கைவிடுமாறு கண்டித்துள்ளனர். இதனால், விரக்தியடைந்த அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Loading...
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...








































