கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் எதிர்காலத்தில் சீனாவில் இருந்து 90,000 மெற்றிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் சீன உர கையிருப்பு கிடைக்கும் என தெரிவித்த அவர், எதிர்வரும் பருவத்திற்கு இந்த உரம் பயன்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, முன்னர் நிராகரிக்கப்பட்ட சீன உரக் கப்பலில் இருந்து உரம் எடுக்கப்பட மாட்டாது என்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








































