Loading...
தடுப்பூசி விகிதத்தில் உலகில் உள்ள 194 நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த நூற்றாண்டில் ஒரு நாடு என்ற வகையில் மக்களுக்குக் கிடைத்த மிக உயர்ந்த சாதனை இது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
Loading...
தடுப்பூசி மூலம் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பில் பல நடவடிக்கைகள் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், சில பிரச்சினைகளை இனங்கண்டு தேவையான தீர்வுகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார்.
Loading...








































