பதவி விலக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே லிட்ரோ எரிவாயு நிறுவத்தின் தலைவர் தெசார ஜயசிங்க மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் முனையத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட பின்னர் லிட்ரோ நிறுவன தலைவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து நிதி அமைச்சின் செயலாளரும், லிட்ரோ நிறுவனத்தின் தலைவரை பதவி விலக்கும் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்.
அத்துடன், லிட்ரோ நிறுவன தலைவராக ரேனுக பெரேராவும் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே, தெசார ஜயசிங்க மீணடும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் பணிப்புரையின் பேரில் லிட்ரோ தலைவர் பதவியில் இருந்து ஜயசிங்க நீக்கப்பட்டு, பின்னர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








































