பாணந்துறையில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த இரு மாணவிகளுக்கு, தனது காற்சட்டையை கழற்றி மர்ம உறுப்பை காண்பித்த குற்றச்சாட்டில் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் கான்ஸ்டபிள் ஒருவர் பாணந்துறை தெற்குப் பொலிஸாரால் நேற்று முன்தினம் (12) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் கணக்காளர் ஒருவரின் சாரதியாக கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த 10ஆம் திகதி மாணவிகள் இருவருக்கு, காரில் வந்த ஒருவர் அணிந்திருந்த காற்சட்டையை கழற்றி நிர்வாணமாகக் காட்டியதாக பாடசாலை அதிபர் வழங்கிய இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். .
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த கார் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் கணக்காளருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் மொரகஹஹேன மில்லேவ பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய திருமணமானவர்.








































