திருச்சி கண்டோன்மென்ட் அலெக்சாண்டிரியா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சர்மிளா (வயது 35). இவர் பாரத் ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்,. இவர் தனது மகள் சிவானியுடன் தனியே வசித்து வருகிறார்.
நேற்று அவர் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவை திறக்கததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்க்கும் போது சிவானி தூக்கில் தொங்கியுள்ளார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் சிறுமியின் உடல் எடை அதிகமாக உணவு கட்டுபாடுகளை கடைபிடித்துள்ளார். ஆனாலும், உடல் எடை குறையாததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.








































