பள்ளி சிறுமியை கடத்தி சென்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் புதருக்குள் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது. பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த போதிலும் கூட அவர்களுக்கு எதிரான இதுபோன்ற பாலியல் வன் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதன்படி ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டம் பிச்சிவாரா கிராமத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை, அதே பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவன் உணவு இடைவேளையின் போது தனது பைக்கில் கடத்திச் சென்றுள்ளார். பின்னர் காட்டுப்பகுதியில் உள்ள புதரில் வைத்து சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, சிறுமியின் வீட்டின் அருகே அந்த சிறுமியை வீசிவிட்டு சென்றுள்ளார்.
இதனை அறிந்து கோபமடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். தற்போது அந்த மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








































