Loading...
டெல்லியில் பாண்டவ் நகர் பகுதியில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை வேலை விஷயமாக ஊருக்கு சென்றுவிடவே அந்த சிறுமியின் தாய் நோய்வாய்ப்பட்டுள்ளார். தாயாரின் உடல்நலம் மோசமாகவே செய்வதறியாது திகைத்த அந்த சிறுமி பக்கத்து வீட்டுகாரரிடம் உதவி கேட்டுள்ளார்.
பக்கத்துவீட்டில் வசித்து வரும் அருண் என்ற இளைஞர் மருந்து வாங்க அழைத்து செல்வதாக கூறி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
Loading...
இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் தலைமறைவாக உள்ள அருணை தேடி வருகின்றனர்.
Loading...








































