இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வெள்ளை அரிசியை தான் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். அரிசியை எளிதாக சமைக்க முடியும் என்பதால் அனைவரும் அரிசியை உண்ணுகின்றனர். தினமும் அரிசி சாதத்தை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்..
தினமும் வெள்ளை அரிசி சாப்பிடுவதால் பற்களுக்கு தேவையான கால்சியம், இதயத்திற்கு அவசியமான நல்ல கொழுப்பு உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகள் குறைக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி உடலின் பல முக்கிய செயல்பாடுகளுக்கு தேவையான மெக்னீசியமும் அழிந்து விடுகிறது.
வெள்ளை அரிசியை உட்கொள்வதால் இரத்த சர்க்கரையை உடனே அதிகரிக்கலாம். அதே நேரத்தில் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவும் வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி3 மற்றும் அத்தியாவசிய புரதங்களை அரிசி சாதம் அழிக்கிறது.
வெள்ளை அரிசியை விட பிரவுன் ரைஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது புற்றுநோய் போன்ற கொடிய நோயிலிருந்து காப்பாற்ற உதவும். அதுபோல வெள்ளை அரிசியை விட பிரவுன் அரிசியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவு. அதாவது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
வெள்ளை சாதம் சாப்பிடுவதால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்ந்து எடையை அதிகரிக்க தூண்டும். அதே நேரம் அளவுக்கு அதிகமாக சாதத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.








































