தனக்கு திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தம்பி காதலித்ததால், தம்பியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹரிஹராவை சேர்ந்த இப்ராஹிம் என்பருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்ணனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட அந்த பெண்ணை அவரது தம்பி அல்தாப் காதலித்து வந்துள்ளார். மேலும் தான் காதலித்த பெண் எனக்கு அண்ணியாக வரப்போவதை நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து உள்ளார்.
இந்த விஷயம் அண்ணன் இப்ராஹிமிற்கு தெரியவந்தது. இதனால் நிச்சயம் செய்யப்பட்ட பெண் எங்கே தனக்கு கிடைக்காமல் தம்பி உடன் ஓடி விடுவாளோ என கருதி தம்பி அல்தாபை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கடந்த 18ஆம் தேதி தனது தம்பியை அல்தாபை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் தம்பியைக் கொன்ற இப்ராஹீமை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.








































