கோவையில் விஷம் தடவிய கேரட்டை தெரியாமல் சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் செங்குட்டைப்பாளையத்தைச் சேர்ந்த தேவசித்து என்பவரது மகள் எனிமா ஜாக்குலின். இவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு பசியாக இருப்பதால் நூடூல்ஸ் செய்வதற்காக தங்களது கடையில் இருந்து பொருட்கள் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கே எலிகளை கொள்ள விஷம் தடவி வைக்கப்பட்டு இருந்த கேரட்டை தெரியாமல் ஜாக்குலின் எடுத்து சாப்பிட்டுள்ளார்.
அதன் காரணமாக சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








































