கொரோனாவுக்கு கேரளாவில் 3.53 லட்சம் பேர், தமிழ்நாட்டில் 1.38 லட்சம் பேர், மகாராஷ்டிரத்தில் 1.37 லட்சம் பேர், கர்நாடகாவில் 1.09 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா 3-ம் அலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
அந்த வகையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,07,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 6-ந் தேதி தினசரி பாதிப்பு 90,928 ஆக இருந்தது. மறுநாள் 1.17 லட்சமாக உயர்ந்தது. அதன்பிறகு தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்தது.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக பாதிப்பு படிப்படியாக சரிந்து வரும் நிலையில், நேற்றைய பாதிப்பு கடந்த 1 மாதத்தில் இல்லாத அளவில் குறைவாக அமைந்துள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 21 லட்சத்து 88 ஆயிரத்து 138 ஆக உயர்ந்தது.
நாட்டின் தினசரி பாதிப்பு விகிதம் 7.98-ல் இருந்து 7.42 சதவீதம் ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 11.21-ல் இருந்து 11.20 சதவீதம் ஆகவும் குறைந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 33,538, கர்நாடகாவில் 12,009, மகாராஷ்டிரத்தில் 11,394, தமிழ்நாட்டில் 7,524 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக ஆயிரத்தை தாண்டி இருந்தது. இந்நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது. கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 444 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 865 பேர் பலியாகி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில் மகாராஷ்டிரத்தில் 68, கர்நாடகாவில் 50, தமிழ்நாட்டில் 37, மேற்கு வங்கத்தில் 31, குஜராத்தில் 34, ராஜஸ்தானில் 19, டெல்லியில் 17, உத்தரபிரதேசத்தில் 17, ஒடிசாவில் 22, பஞ்சாபில் 16, அசாமில் 16, சத்தீஸ்கர் மற்றும் அரியானாவில் தலா 14, உத்தரகாண்டில் 13 பேர் அடங்குவர். மொத்த பலி எண்ணிக்கை 5,01,979 ஆக உயர்ந்தது.
கடந்த சில நாட்களாக கொரோனா புதிய பாதிப்பை விட நாள்தோறும் அதன்பிடியில் இருந்து குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 2,13,246 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 4 லட்சத்து 61 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 12,25,011 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 1,06,637 குறைவாகும்.
நாட்டில் அதிகபட்சமாக கேரளாவில் 3.53 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 1.38 லட்சம் பேர், மகாராஷ்டிரத்தில் 1.37 லட்சம் பேர், கர்நாடகாவில் 1.09 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.
நாடு முழுவதும் நேற்று 45,10,770 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 169 கோடியே 46 லட்சத்தை கடந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 74.01 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 14,48,513 மாதிரிகள் அடங்கும்.








































