கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள நகரை சேர்ந்தவர் செல்வம் இவருக்கு சங்கம் என்ற மனைவியும் சதீஷ் , இயேசு ஜெபின் என்ற இரு மகள்களும் உள்ளனர். சதீஷூக்கு திருமணமாகி அருகில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இயேசு ஜெபின் தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இயேசு ஜெபினுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து எனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தாய் தந்தையை துன்புறுத்தி வந்துள்ளார்.
இவரின் இந்த செயலால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வ மற்றும் தங்கம் தங்கள் மூத்த மகனுக்கு தொலைபேசியில் அழைத்து தங்களின் உயிரோடு இருக்க போவதில்லை என கூறினர். உடனடியாக வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் அட்டகாசம் செய்தது தாய் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








































