தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதும் இல்லத்தரசிகளுக்கு மத்தியில் வரவேற்பு இருக்கும். அதிலும் சீரியலில் நடிக்கின்ற நடிகைகளுக்கு சமூக வலைதள பக்கங்களில் அதிக பாலோவர்கள் மற்றும் ரசிகர்கள் இருப்பார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் நடிகைகளுக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால்தான் விஜய் டிவி நடிகைகள் மற்றும் நடிகர்கள் பின்னாளில் வெள்ளித்திரையில் நடிகர் நடிகைகளாக ஒரு வருகின்றனர்.
A post shared by Sweety (@kanmani_manoharan)
அதே வரிசையில் பாரதிக்கண்ணம்மா சீரியலில் தற்போது நடித்து அஞ்சலியாக நடித்து வரும் கண்மணி மனோகர்க்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.சமீபத்தில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்தார்.
இந்த நிலையில், தற்போது ஜீ தமிழின் ஒரு சீரியலில் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.








































