தற்போது உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ்கள் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது.
நோக்கியா நிறுவனம், நோக்கியா கோ இயர்பட்ஸ் 2+ மற்றும் நோக்கியா கோ இயர்பட்ஸ் 2 ப்ரோ ஆகிய ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸ்கள் 24 மணி நேரம் பேட்டரி லைஃபை கொண்டுள்ளன.
மேலும் இவற்றில் வழங்கப்பட்டுள்ள 10 எம்.எம் டிரைவர்கள் கூடுதல் பேஸை வழங்குகின்றன. இதில் மற்றொரு சிறப்பம்சமாக சுற்றுப்புற சத்தத்தை தடை செய்யும் அம்சமும் இடம்பெற்றுள்ளது.
நோக்கியா கோ இயர்பட்ஸ் 2+ விலை இந்திய மதிப்பில் ரூ.3000-ஆகவும், நோக்கியா கோ இயர்பட்ஸ் 2 ப்ரோவின் விலை இந்திய மதிப்பில் ரூ.3,400-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் இந்த இயர்பட்ஸ்கள் விற்பனைக்கு வருகின்றன.
இந்த இயர்பட்ஸ்களில் 5.2 வெர்ஷன் ப்ளூடூத், ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் இணக்க பயன்படும் கூகுளின் ஃபாஸ்ட் பேர் டெக்னாலஜி, 1.5 மணி நேரத்தில் முழுதாக சார்ஜ் ஆகும் 300mAh பேட்டரி ஆகியவையும் தரப்பட்டுள்ளன.
தற்போது உலக அளவில் அறிமுகமாகியுள்ள இந்த இயர்பட்ஸ்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.








































