ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த தாய் மகளுக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் அவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பலனின்றி சிறுமியின் தாய் உயிர் இழந்து விடவே அந்த மருத்துவமனையில் இருந்த ஸ்வர்ண குமாரி என்ற பெண் சிறுமிக்கு ஆதரவாக இருப்பது போல் கவனித்து வந்தார்.
பின்னர் அந்த சிறுமியின் தந்தையிடம் நாட்டு மருந்து மூலம் கொரோனாவை குணப்படுத்தலாம் என கூறியுள்ளார் இதனை நம்பிய அந்த சிறுமியின் தந்தை அவருடன் தனது மகளை அனுப்பி வைத்துள்ளார். சிறுமியை அழைத்துச் சென்ற ஸ்வர்ண குமாரி ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு கடத்திச்சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.
இதில் சிறுமியின் உடல்நிலை மோசம் அடையவே அங்கிருந்து தப்பித்து குண்டு வந்த சிறுமி தனது தந்தையிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஸ்வர்ண குமாரி மற்றும் விபச்சார கும்பல் இருபத்தி ஒரு பேரை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் சிறுமி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சி அடைந்த நீதிபதி சிறுமியுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் சிறுமியுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சேர்ந்த 61 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா சிகிச்சை அளிப்பதாக அழைத்துச் சென்று சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








































