வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ரிஷப் பண்ட் சிக்ஸ் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கொல்கத்தாவில் நேற்று நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக விராட் கோலி, ரிஷப் பண்ட் தலா 52 , வெங்கடேஷ் ஐயர் 33 ரன்கள் விளாசினர். பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இப்போட்டியில் இந்திய அணி வீரர் பேட் செய்த போது ஜேசன் ஹோல்டர் வீசிய யார்க்கர் பந்தை அசால்ட்டாக ஒற்றை கையில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் பாணியில் சிக்ஸ் அடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அசர வைத்தார்.
இந்த ஷாட்டை பார்த்து எதிர்முனையில் இருந்த வெங்கடேஷ் ஐயரும், கேப்டன் ரோகித் சர்மாவும் அசத்து போய் கைத்தட்டினர். சமீபகாலமாக ரிஷப் பண்ட் ஒற்றை கையில் பவுண்டரி அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








































