சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், தனது நாயைக் காப்பாற்ற கங்காருவின் அருகில் ஒருவர் செல்வதைக் காண முடிகின்றது. கங்காரு தனக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காது என அவருக்கு தோன்றுகிறது.
ஆனால், கங்காருவின் அருகில் அவர் சென்ற உடனேயே, அது அவரை தன் கால்களால் தாக்குகிறது. கங்காரு கொடுத்த உதையால் அந்த நபர் விழுந்துவிடுகிறார். மறுபுறம் இதைப் பார்த்த அந்த நபரின் குழந்தைகளும் உறவினர்களும் வெகுவாக சிரிப்பதையும் வீடியோவில் கேட்க முடிகின்றது.
இந்த வீடியோவைப் பார்க்கும் போது அந்த நபர் சுற்றுலா போல் குடும்பத்துடன் காட்டிற்கு வந்திருப்பது தெரிகிறது. அப்போது அவருடைய வளர்ப்பு நாயின் அருகில் கங்காரு வருகிறது. அதைக் காப்பாற்ற செல்லும் நபர் பரிதாபமாக தாக்கப்படுகிறார்.
A post shared by طبیعت (@nature27_12)








































