யாழ். மாவிட்டபுரம் பகுதியில் புகையிரத பாதைக்குள் மோட்டார்சைக்கிளுடன் நுழைந்த குடும்பஸ்தர் மீது புகைரதம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மக்கள் பாதுகாப்பு கருதி போடப்பட்டிருந்த பாதுகாப்பு கடவை பூட்டப்பட்டிருந்த நிலையிலும் குறித்த நபர் அதனை மீறி புகையிரத பாதைக்குள் நுழைந்துள்ளார்.
இதன்போது காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் அவர் மீது மோதியுள்ளது.
விபத்தில் பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











































