வாட்ஸ்அப்பில் வரப்போகும் இந்த அம்சம் முதலில் ஐஓஎஸ்ஸில் அறிமுகமாகும் என்றும், பிறகு ஆண்ட்ராய்டு, கணினிக்கும் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிரபல குறுந்தகவல் பரிமாற்ற செயலியாக இருக்கும் வாட்ஸ்அப், பயனர்களுக்கு புது புது அம்சங்களை வெளியிட்டு வருகிறது.
வீடியோ கால், ஆடியோ கால், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்ட பல அம்சங்கள் வாட்ஸ்அப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பில் போலிங் (கருத்துக்கணிப்பு) வசதியும் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அம்சம் குரூப் சேட்டில் இடம்பெறும். குரூப்பில் உள்ள நபர்கள் கருத்துக்கணிப்பில் கலந்துக்கொண்டு வாக்களிக்கலாம். அதன் முடிவுகளும் குரூப்பிலேயே காட்டப்படும் என கூறியுள்ளது.
இதேபோன்ற போலிங் அம்சம் இதற்கு முன் டெலிகிராம் செயலியில் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
வாட்ஸ்அப்பில் வரப்போகும் இந்த அம்சம் முதலில் ஐஓஎஸ் பயனர்களுக்கு அறிமுகமாகும் என்றும், பிறகு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும், கணினிக்கும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.








































