செல்லுபடியாகும் உரிமம் இன்றி அத்தியாவசியமற்ற 367 பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த கட்டுப்பாடு அமுலுக்கு வருவதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட பொருட்களில் அப்பிள், திராட்சை, ஒரேஞ்ச், பாலாடைக்கட்டி, அத்துடன் தண்ணீர், வெளிநாட்டு மதுபானம் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.
மேலும், காலணிகள், இசைக்கருவிகள், விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய பொருளாதார நிலைமையை நிர்வகிப்பதற்காக வரையறுக்கப்பட்ட காலத்திற்கு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே இத்தகைய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், அதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும் கூறுகிறது.








































