நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்தார்.
ஹாமில்டனில் நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது.
261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 46.4 ஓவர்களில் 198 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் மூலம் 6 உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் மேலும் ஒரு சாதனையை தன்வசப்படுத்தினார். நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியதன் மூலம் உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க்கின் (23 ஆட்டங்கள்) சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்தார்.








































