கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரை இறுதிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளனர்.
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சன்சியோன் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை கால் இறுதி ஆட்டங்கள் நடந்தது. இதன் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து- தாய்லாந்து வீராங்கனை பூசனன் ஓங்பாம்ருங்பான் மோதினர். முதல் செட்டை பி.வி.சிந்து 21-10 என்ற புள்ளி கணக்கில் எளிதாக கைப்பற்றினார். 2-வது செட்டிலும் பி.வி.சிந்து கையே ஓங்கியது. அந்த செட்டை அவர் 21-16 என்ற கணக்கில் தனதாக்கினார். இதன் மூலம் 21-10, 21-16 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த்-கொரிய வீரர் வான்ஹோ மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 21-12, 18-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.








































