Loading...
கொழும்பு- பேலியகொடவில் நேற்றிரவு இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகளால் குறிவைக்கப்பட்ட வர்த்தகர் ஒருவர் காயமின்றி தப்பியுள்ளார்.
வர்த்தகர் அவரது வீட்டில் அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்திய இரு நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
Loading...
இச் சம்பவம் தொடர்பிலான காணொளி சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ள நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...








































