Loading...
அவல் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இந்த ரெசிபியை 30 நிமிடங்களில் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்
அவல் மாவு – 1 கப்
பால் – 500 மி.லி பாதாம் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – தேவைக்கு ஏற்ப
ஏலக்காய்த்தூள் – சிறிது
நெய் – 1 டீஸ்பூன்
செய்முறை
அகலமான பாத்திரத்தில் அவல் மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு, நெய் மற்றும் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
Loading...
பாலுடன், பாதாம் பவுடர் கலந்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.
உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு கொதிக்க வைக்கவும். 5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கினால் அவல் பால் கொழுக்கட்டை தயார்.
Loading...








































