சுக்கிரன் ஜூலை 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைந்தார்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை மிதுனம் ராசியில் பயணம் செய்வார்.
இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும். எனவே அவ்வப்போது கவனம் தேவை. வெள்ளிக்கிழமை பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.
ரிஷபம்
தன ஸ்தான சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும்.
மிதுனம்
பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.
கடகம்
சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பார்கள்.பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். வெள்ளிக்கிழமைகளில் பூஜை அறையில் அம்மன் படத்தின் முன் விளக்கேற்றி வழிபடுங்கள்.
சிம்மம்
பண வருவாய் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பார்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும்.
கன்னி
பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் மனைவியுடனோ அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். அமைதியாக நிதானமாக பேசவும்.
துலாம்
காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான முயற்சி செய்யலாம். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.
விருச்சிகம்
பணவரவு அதிகரித்தாலும் செலவு வருதே என்று கவலை வேண்டாம் பரிகாரம் இருக்கிறது.வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்து செலவுகள் எற்படும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கா மந்திரம் கூறி வணங்கலாம்.
தனுசு
உங்கள் ராசிக்கு சுக்கிரன் பார்வை கிடைக்கிறது. வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாவது வீட்டில் செவ்வாய் உட இணைந்துள்ளதால் பெண்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.
மகரம்
பணம் நகைகளை பத்திரமாக வைத்திருக்கவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும்.
கும்பம்
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களின் உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என உற்சாகத்துடன் பாடப்போகிறீர்கள்.
மீனம்
அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபடவும் நன்மைகள் நடைபெறும்.








































