- இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தர்பாரண்யேஸ்வர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சோமவாரத்தையொட்டி, ஒவ்வொரு திங்கட்கிழமையும் 108 சங்காபிஷேகம் நடந்து வந்தது. நேற்று சோமவாரம் நிறைவையொட்டி தியாகராஜருக்கு அபிஷேகம் செய்வதற்காக 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி, சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து விக்னேஸ்வர பூஜையுடன் 1008 சங்குகளுக்கும் கும்ப பூஜையும், மகா பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் பிரதான சங்குகளை சுமந்து கோவிலின் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரம் வலம் வந்து தர்பாரண்யேஸ்வர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.








































