Loading...
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி எதிர்காலத்தில் இலங்கையில் வட்டி விகிதங்களைக் குறைக்க உதவும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கடன் வசதி கிடைக்காவிட்டால் அரசாங்கம் அதிக வட்டிக்கு நிதியை வசதிகளை பெற்றிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
நேற்று தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்றாவது அல்லது நான்காம் காலாண்டுக்குள் இலங்கையின் பணவீக்கத்தை ஒற்றை பெறுமதிக்கு கொண்டு வர முடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...








































