சாம்சங் நிறுவனம் தனது புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
புதிய கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போனினை மிட் ரேஞ்ச் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேலக்ஸி F14 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ 90Hz ஸ்கிரீன், 13MP செல்ஃபி கேமரா, எக்சைனோஸ் 1330 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வசதியை கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.0 கொண்டிருக்கும் கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு ஒஎஸ் அப்டேட்களையும், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களையும் பெறும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த், மேக்ரோ கேமராக்கள் வழங்கப்படுகின்றன.
பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன், 6000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி F14 5ஜி அம்சங்கள்:
6.6 இன்ச் 1080×2408 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி V LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
ஆக்டா கோர் எக்சைனோஸ் 1330 பிராசஸர்
மாலி G68 MP2 GPU
4 ஜிபி, 6 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
2MP மேக்ரோ சென்சார், எல்இடி ஃபிளாஷ்
13MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
6000 எம்ஏஹெச் பேட்டரி
25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் B.A.E. பர்பில், கோட் கிரீன், OMG பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 490 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷன் விலை ரூ. 15 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விற்பனை மார்ச் 30 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட், சாம்சங் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.