6 மாதம் முதல் 3 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு, மாற்று போசணைத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திரிபோஷ உற்பத்தியை வழமைக்கு கொண்டு வரும் வரை இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், சிறார்கள் முட்டைகளை அதிகமாக உண்ணுவதால், திரிபோஷாவுக்கு மாற்றீடாக முட்டையை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் திரிபோஷ சிறுவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளமை பிரச்சினையாக எழுந்துள்ளது.
மேலதிக ஊட்டச்சத்தாக வழங்கப்பட்ட திரிபோஷவை வழங்க முடியாத நிலை காணப்படுமாயின் அதற்கு நிகரான மாற்றீடு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குடும்பநல சேவையாளர்கள் என்ற அடிப்படையில், 6 மாதம் முதல் 3 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு மீண்டும் திரிபோஷ வழங்கப்படும் வரையில், மாற்றீடாக மாதாந்தம் ஒருத் தொகை முட்டையை வழங்குவதற்கு பரிந்துரைப்பதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.








































