Loading...
கொலம்பியாவில் இருந்து 50 பயணிகளுடன் அமெரிக்காவுக்கு சென்றபேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் பலியாகினர்.
குறித்த பேருந்து பிளேயன் நகரின் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து நிலைதடுமாறியது. இதனையடுத்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.
Loading...
இடத்திலேயே பலி
பேருந்தில் பயணித்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
Loading...








































