யாழ்ப்பாணம் காவல்துறையினரால் திருட்டுடன் சம்மந்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்ப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களிற்கு முன்னர் யாழ்நகரில் உள்ள மதுபானசாலை ஒன்றினை உடைத்து திருடப்பட்டிருந்தது.
அதன் பின் கடை ஒன்றின் கூரை பிரித்து 03 லட்சம் பணம் 01 லட்சம் ரூபா பெறுமதியான சிகரட் என்பனவற்றை திருடியதாக யாழ்ப்பாண காவல் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சந்தேகநபர் கைது
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கேவா வசந் தலமையிலான குழு, நேற்றையதினம் மேலும் ஒரு கடை உடைப்பதற்காக சுத்தியல் சாவிகள் உடன் பை ஒன்றை கொண்டு சென்ற சந்தேகநபரை கைது செய்து விசாரித்தபோது ஏனைய திருட்டு சம்பவங்கள் மேற்கொண்டமை தொடர்பில் தெரியவந்துள்ளது.
63 வயதுடைய சந்தேகநபரை கைது செய்து விசாரணை இடம்பெறுவதுடன் நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.








































