வாரத்தில் வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமான ஒரு திருநாளாகும். இந் நாளில் நாம் எவ்வாறான செயல்கள் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
ஒருவாரத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிகவும் மங்களகரமானதாக அமைவதுடன் வாரத்தில் எந்த நாளில் வீட்டில் விளக்கு ஏற்றாவிட்டாலும் வெள்ளி கிழமை தவறாமல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது இந்துக்களின் நியதி.
பொதுவாகவே வெள்ளிக்கிழமை நாளில் கல் உப்பு, தயிர், அரிசி, நல்லெண்ணெய் வாங்கினாலும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
வெள்ளிக்கிழமை அன்று தங்கம் வாங்கினாலும் வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் காலை அல்லது மாலை நேரத்தில் மகாலட்சுமிக்கு மொச்சை அல்லது பச்சை பயற்றில் சுண்டல் செய்து நைவேத்தியம் படைத்து வழிபட்டால் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் உருவாகி இலச்சுமி கடாட்சம் ஏற்படும்.
மேலும் வெள்ளிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள தாயாருக்கு அபிஷேகம் செய்து வழிபட இல்லத்தில் சுபிட்சம் நிலைத்து இருக்கும். அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுக்கலாம் பண வரவு அதிகரிக்கும்.








































