Loading...
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று (11.1.2023) பிற்பகல் 2.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரித்துள்ளன.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
Loading...
ஹிந்துகுஷ் மலைப்பகுதிகளில் 213 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் லாகூர், இஸ்லாமாபாத், கைபர் பக்துன்க்வா ஆகிய நகரங்களில் நில அதிர்வு அதிக அளவில் உணரப்பட்டுள்ளது.
இதனால் இங்குள்ள மக்கள் அச்சத்துடன் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.
Loading...








































