பிரித்தானியாவில், குறிப்பாக லண்டன் பகுதியில், தமிழர்களை இலக்கு வைத்து செயல்படும் கொள்ளை கும்பல் ஒன்று பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கும்பல், தமிழர்களை பின்தொடர்ந்து, அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை பறித்து செல்கிறது.
லண்டன் சவுத்ஹோல் பகுதியைச் சேர்ந்த ஒரு தமிழ் பெண், 25,000 பவுண்டுகள் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையில் இழந்தார்.
அந்த பெண், ஒரு மெட்ரோ வங்கியில் இருந்து தங்க நகைகளை எடுத்து வந்து, ஒரு கொண்டாட்ட நிகழ்வுக்கு செல்ல தயாராக இருந்தார்.
நகைகளை கார் பார்க்கில் உள்ள காரில் வைத்து விட்டு அங்கிருந்து புறப்பட தயாராகியுள்ளார், அப்போது கார் கண்ணாடியில் தட்டிய மர்ம நபர், உங்களுடைய பணம் கீழே விழுந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் காரை விட்டு இறங்கி அந்த பணம் தன்னுடையது இல்லை என்று தெரிவித்துள்ளார், இதற்கிடையில் மற்றொரு நபர் காரின் மற்றொரு பக்கத்தில் இருந்து வந்து, நகைகளுடன் இருந்த கைப்பையை பறித்துச் சென்றார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கொள்ளையர்களை கைது செய்ய வலைவிரித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் விழிப்புணர்வு
இந்த சம்பவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சமூக வலைதளங்களில் பதிவுகள் மற்றும் விழிப்புணர்வு வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழ்ச் சங்கங்கள் மற்றும் அமைப்புகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளன.