நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.
அதேபோல் நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சூரியனும் சனியும் நெருங்கி வரும்.
இதனால் சனிபகவானுடன் சூரிய கிரகத்தின் சேர்க்கை கும்ப ராசியில் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
எனவே, சனி- சூரியன் சேர்க்கையால் குறிப்பிட்ட ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.
மேஷம்
இந்த நேரத்தில் வருமானம் வேகமாக அதிகரிக்கும்.
புதிய வருமானத்துற்கான ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
பணம் முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
வியாபாரம் செய்பவர்களுக்கு இந்நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.
பங்குச் சந்தை, லாட்டரி அல்லது பந்தயம் ஆகியவற்றிலிருந்தும் பயனடையலாம்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
வேலையில் இருப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்.
இதனுடன், பதவி உயர்வுக்கான முழு வாய்ப்புகளும் உள்ளன.
மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் அதிக லாபம் ஈட்டலாம்.
வேலை தேடுபவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல வேலை கிடைக்கும்.
வீட்டில் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும்.
நம்பிக்கை அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்
புத்தாண்டில் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் சாதகமாக அமையும்.
திருமணமானவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
மனைவியின் ஆதரவைப் பெறுவார்கள்.
திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.