Loading...
கிளிநொச்சி இராமநாதபுரம் வயலூர் முருகன் ஆலயத்தில் மாம்பழம் ஒன்று 645, 000 ரூபாவிற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் வயலூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 7ஆம் நாளான நேற்று முன்தினம்(06) மாம்பழத்திருவிழா நடைபெற்றது.
மாம்பழத்திருவிழா
இதன்போது முருகப்பெருமானுக்கு படைத்த மாம்பழம் 645,000 ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
Loading...
இந்நிலையில் ஏல விற்பனையை சிறப்பாக நடாத்திய ஆலய மகோற்சவ பிரதம குருவிற்கும் வயலூரான் இந்து இளைஞர் மன்றத்தினருக்கும் ஏலவிற்பனையில் கலந்து கொண்ட அடியார்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை ஆலய நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
இராமநாதபுரம் வயலூர் முருகன் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல முருகன் ஆலயங்களுள் ஒன்றாகும்.

Loading...








































