Loading...
மித்தெனிய தொரயாய பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இராசயனப்பொருள் என்று தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை மீட்கப்பட்ட 20 இரசாயன மாதிரிகளில் 17மாதிரிகள் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Loading...
அத்தோடு நெத்தோல்பிட்டிய மற்றும் கந்தானை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகவும், தொடர்புடைய அறிக்கைகள் அடுத்த வாரம் மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
Loading...








































