ஜே.வி.பியினர் 1988-1989ஆம் ஆண்டுகளில் செய்த சண்டித்தனத்தை இப்போது காட்ட முயற்சிக்க வேண்டாம்.நாங்கள் இருப்பது 2025 உலகத்தில் என மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வருட காலத்தை வீணடித்து
தொடர்ந்து பேசிய அவர் ஜே.வி.பியினரே அன்று மின்சார சபை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமூலத்தை எரிப்பதாகவும் தீ மூட்டிக் கொள்வதாகவும் தெரிவித்தார்கள். ஆனால் இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கொலை செய்வதாக கூறுகின்றனர்.
அரசாங்கம் ஒரு வருட காலத்தை வீணடித்தது.ஒரு வருடத்திற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாது கூறிய பொய்களை மறைப்பதற்காக மேலும் மேலும் பொய்களை சொல்லுகின்றனர்.
இன்னும் நான்கு வருடங்கள் இவ்வாறு அரசாங்கம் செல்வதென்றால், மக்கள் அதற்கான பதிலை எதிர்காலத்தில் வழங்குவர். எனது தந்தையின் பாதுகாப்பை குறைத்தது மற்றும் தந்தைக்கு எதிராக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் எதிர்ப்பு அரசியலின் செயற்பாடாகவே நாம் நோக்குகிறோம்.
எமக்கு கிடைத்த அழைப்புக்கே ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டோம் .இவை ஜனநாயகத்தின் செயற்பாடாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.








































